சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் கிராமத்தில் பயணிகள் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் இடங்களில் பயணிகள் நிழல்குடை இல்லை என்று மனு அளித்தனர். மனுவை வேளாண்மை மற்றும் உழவன் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவிப்பின் பேரில் இதை அடுத்து புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் ஏற்பாட்டில் புவனகிரி அருகே உள்ள லால்புரம் கிராமத்தின் எல்லை காளியம்மன் கோவில் அருகே புதிதாக பயணியர் நிழல்குடை கட்டப்பட்டது. பேருந்துகளில் ஏறு பயணிகள் காத்திருக்கும் போது நிற்பதற்காக வசதியாக இந்த நிழல்குடை கட்டி முடிக்கப்பட்டது திறப்பு விழா நடைபெற்றது.
லால்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சேகர் தலைமை தாங்கினார். சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார், புவனகிரி ஒன்றிய ஆத்மா திட்டக்குழு தலைவரும் புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான டாக்டர் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி