சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் 700 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த மாதம் அதிகாரிகள் தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் இடம் மாற்றம் செய்து பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனிடையே தங்களுக்கு ஆண்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பல வருடங்களாக வழங்காததை கண்டித்து ஏழாவது கமிஷன் ஊதிய உயர்வை வழங்க கோரியும் நீதிமன்ற உத்தரவை மீறி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பல்கலைக்கழக வளாகத்தில் தனி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது இதற்கு சப் கலெக்டர் ரேஷ்மி ராணி தலைமை தாங்கினார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு அருட்செல்வி பதிவாளர் பிரகாஷ் அதிகாரிகள் சங்கத் தலைவர் தனசேகர பாண்டியன் வரதராஜன் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக்ஆய்வாளர் அம்பேத்கர் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
பணியிட மாற்ற உத்தரவை நகலை பெற வேண்டும் என 23 தனி அதிகாரிகளுக்கு அழுத்தம் தரக்கூடாது என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்றனர் இதை எடுத்து அனைவரும் கலந்து சென்றனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி