அண்ணாமலைநகர் பகுதி பள்ளியில் பணிபுரிகின்ற பதிவு எழுத்தர் ஒருவர்,ஆசிரியர்ப்பணி வாங்கித் தருவதாக இருவரிடம் பணத்தைப் பெற்று போலியான பணியாணை வழங்கியதால் கைது!
அண்ணாமலை நகர் ராணி சீதை ஆட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பேர்லின் வில்லியம் என்பவர், தங்களது பள்ளியில் பதிவு எழுத்தராக பணிபுரிகின்ற ராஜதுரை வயது 35 த/பெ. நந்தகோபால் ஆயிப்பேட்டை ஒரத்தூர் என்பவர் மேற்படி பள்ளியில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ராஜராஜன் 34
த/பெ. சுவாமிநாதன் குமராட்சி. பண்டித்துரை த/பெ. 27 சீனிவாசன் அஅயிப்பேட்டை ஆகியோரிடம் இருந்து மொத்தம் ஆறு லட்சத்து 83 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பள்ளியின் நிர்வாக தலைவரான எம். ஏ .எம் .ஆர் முத்தையா என்கின்ற அய்யப்பன் என்பவரின் கையொப்பத்தையும், அதன் செயலாளர் கையொப்பத்தையும் கொண்ட போலியான பணி ஆணையை வழங்கி உள்ளார்.
மேற்படி பணி ஆணையைப் பெற்ற இருவரும் அதன் உண்மை தன்மையை ஊர்ஜிதப்படுத்த பள்ளிக்குச் சென்றபோது அங்கு பள்ளி தலைமை ஆசிரியை மேற்படி பணி ஆணை இரண்டும் போலியானவை என்றும் கூறி உள்ளார்.
அது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராஜதுரை மீது அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்களின் உத்தரவின் பேரில், சிதம்பரம் டிஎஸ்பி. திரு. லாமேக் அவர்களின் அறிவுரையின் பேரில் மேற்படி ராதுரையை முத்தையா நகர் பாலம் அருகே அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் அம்பேத்கர் அவர்கள் கைது செய்து மேற்படி எதிரியை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்.
அவர் பயன்படுத்திய கணினிஒன்றும் கைப்பற்றப்பட்டது.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி