Read Time:1 Minute, 6 Second
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு உளவுத் துறை வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சுழற்சி முறையில் விஜய்க்குப் பாதுகாப்பு வழங்குவர்.