0 0
Read Time:2 Minute, 16 Second

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் எனக்கூறி போராட முயன்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.இவர்களை சென்னையில் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டு மாலை 6 மணி ஆகியும் பாஜகவினரை விடுவிக்காததால், அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள். டாஸ்மாக் அலுவலகத்தையே மூடிய பிறகு எங்களால் என்ன பிரச்சனை ஏற்பட போகிறது ? மாலை 6 மணியாகியும் எங்களை விடுவிக்காதது ஏன் ?கொல்கத்தா நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும். 3 விமானங்களை விட்டுவிட்டேன்” என்றார்.

டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழிசை உள்ளிட்டோர் கைது செய்து சென்னை வளசரவாக்கம் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசாருடன் வாக்குவாதம் நடந்து வருகிறது.அப்போது தமிழிசை கூறுகையில்,” மாலை 6 மணிக்கு மேலாகியும் தங்களை விடுவிக்க மறுப்பது ஏன்? கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகமா போடுகிறோம்?இரவு 7 மணி ஆகியும் எங்களை விடுவிக்க மறுப்பது ஏன்? நாங்கள் என்ன பயங்கரவாதிகளா?” என்று ஆதங்கமாக பேசினார்.இந்நிலையில், சென்னை அக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கைது செய்து அடைக்கப்பட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுவிக்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %