0 0
Read Time:2 Minute, 58 Second

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் தோனியையே மிஞ்சி சதத்தை அடித்துள்ள அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2024- 25 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் ரிஷப் பண்ட் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த போது அவர் பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடித்தது அவுட்டானார். அதைப் பார்த்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என்று நேரலையில் கடுமையாக விமர்சித்தார். இந்திய அணி தடுமாறும் போது இப்படி விக்கெட்டை பரிசளித்தது உங்களுடைய இயற்கையான ஆட்டம் கிடையாது என்று அவர் ரிஷப் பண்ட்டை சாடினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலனாதையும் மறக்க முடியாது. இந்நிலையில் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் என்று கவாஸ்கர் தம்மை திட்டியதையே கலாய்த்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார்.

விரைவில் துவங்கும் ஐபிஎல் தொடருக்காக அவர் ஏதோ ஒரு விளம்பரத்தில் நடிப்பதாக தெரிகிறது. அந்த விளம்பரத்தில் கவாஸ்கர் தம்மை திட்டிய ஸ்டுப்பிட் எனும் வார்த்தைகளை சிரித்த முகத்துடன் ரிஷப் பண்ட் மாற்றி ஜாலியாக பேசியுள்ளார். சொல்லப்போனால் கவாஸ்கர் போலவே பேசுவதற்காக அவர் 2 – 3 முறை “ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட் ஸ்டுப்பிட்” வெவ்வேறு ஸ்டைல்களில் பேசியுள்ளார். அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக வைத்துள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %