Read Time:1 Minute, 8 Second
இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மின்னலுக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்தது கொழும்பு வானிலை ஆய்வு மையம்
இலங்கையின் கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கொழும்பு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைக் குறிக்கும் விதமாக இலங்கையின் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு உள்ளிட்ட இதர மாகாணங்களில் மிதமான அளவில் மின்னலுக்கான வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது இலங்கையின் கொழும்பு வானிலை ஆய்வு மையம்.