அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் விரட்டியடிப்பார்கள் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இரண்டு ரைடுகளுக்கு அரண்டு போய் அமித்ஷா முன்னிலையில் ஒருவார்த்தை கூட பேசாமல் கூட்டணியை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சுட்டிக்காட்டிவிட்டார் என்றவுடன் ரோஷம் வாந்தவரைப் போல வீண் அவதூறுகளை மட்டும் அள்ளிவிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் பழனிசாமி.
பாரபட்சமான GST வரிப்பகிர்வை ஏற்றுக்கொண்டு பொருளாதார உரிமையை விட்டுக்கொடுத்தது, உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டு மின்கட்டண நிர்ணய உரிமையை விட்டுகொடுத்தது, CAA வை ஆதரித்து முஸ்லீம் மக்களின் முதுகில் குத்தியது இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜகவிடம் விட்டுக்கொடுத்தது அதிமுக ஆட்சியில் தான். அதோடு அதிமுக ஆட்சியில் தான் நீட் நுழைவு தேர்வு தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டது என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.