வேதாரண்யத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை நிறுவப்படும் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் இன்று ஆய்வு செய்தார். நாகை மாவட்டம், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் செய்தியாளர்களிடம் கூறியது: நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட 2 ஆயிரம் பேர் நாகை, வேதாரண்யம் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்கிஜன் பொருத்தப்பட்ட படுக்கைகளை என்றால் 5 சதவீதம் மட்டுமே காலியாக உள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை இல்லாதிருந்தது. சிறிய அளவு சிலிண்டர்கள் பொருத்தும் வசதி தற்போது மாற்றி அமைக்கப்பட்டு பெரிய சிலிண்டர்கள் பொறுத்தும் வசதிசெய்யப் பட்டுள்ளது.
இங்கு நிமிடத்துக்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலை நிறுவும் பணிகள் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் நிதி உதவியோடு மாநிலத்தில் தொடங்கவுள்ள 78 ஆலைகளில் முதல் 5 ஆவது இடத்தில் இந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்றார்.
நிருபர்: யுவராஜ், மயிலை.