0 0
Read Time:3 Minute, 31 Second

அன்னமளிக்கும் அன்பு சுவர் – நெகிழவைக்கும் கும்பகோணம் இளைஞர்களின் சேவை!

கொரோனா ஊரடங்கால் வருமானத்தை இழந்தவர்கள், பட்டினியாகக் கிடந்தாலும் பரவாயில்லை என யாரிடமும் கேட்கச் சங்கடப்பட்டுக்கொண்டு இருந்துவிடுவார்கள். இது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்க, எல்லோரும் பசியாறச் சாப்பிடும் வகையில் உணவு கொடுக்கும் இளைஞர்கள்.

https://gumlet.assettype.com/vikatan%2F2021-05%2Fdf7aae58-83df-458b-bf5e-80dcda7e2ca6%2F185240707_110371901226057_2827585078383862743_n.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கால் வேலையிழந்த பலர் வருமானமின்றி தவிக்கின்றனர். பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், எந்தச் சங்கடமும் நேராமல் உணவின்றித் தவிப்போரின் பசியைப் போக்கும்விதமாக கும்பகோணத்தில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வித்தியாசமான முறையில் உணவு கொடுத்துவருவது நெகிழ்ச்சியடையவைத்திருக்கிறது.

கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, யார் கொடுக்குறதுன்னும் தெரியக் கூடாது, யாரும் பசியாகவும் இருக்கக் கூடாது' என்ற எண்ணத்தில்,அன்பு சுவர்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் உணவு சமைத்து பொட்டலமாக ரெடி செய்து ஓர் இடத்தில் வைத்துவிடுகின்றனர். உணவு தேவைப்படுபவர்கள் தாங்களாகப் போய், தங்களுக்கு தேவையான அளவு சாப்பாட்டை எடுத்துக்கொள்ளலாம். இளைஞர்கள் செய்துள்ள இந்த ஏற்பாட்டுக்குப் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

பசியில் இருப்பவர்கள் இந்த இடத்துக்கு வந்து தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொண்டு செல்லாம். சங்கடத்தில் தவிக்கும் பலருக்கு இந்த முறை வரப்பிரசாதமாக இருக்கிறது. மதியம் 12 மணிக்கு உணவுப் பொட்டலத்தை வைத்துவிடுவோம். தேவைப்படுவோர் வந்து எடுத்துச் செல்கின்றனர். மூன்று நாள்களாக இதைச் செய்து வருகிறோம். ஒருவேளை உணவு மிச்சப்பட்டால் அவற்றை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். இதற்கு தினமும் ரூ.2,000 செலவாகிறது. இருப்பவர்கள் கொடுக்கலாம், இல்லாதவர்கள் எடுக்கலாம் என்பதே இதன் நோக்கம். வயிறு பசிக்கும்போது யாரும் தயங்கி நிற்கக் கூடாது என்பதை உணர்ந்தவர்கள் இணைந்ததால், இது நடைமுறைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல இளைஞர்கள் இதற்கான நிதி உதவியைச் செய்கின்றனர். கொரோனா லாக்டெளனுக்குப் பிறகும் இதைத் தொடரவிருக்கிறோம்” என்ற இளைஞர்களின் இந்தச் சேவை பாராட்டுதலுக்குரியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %