0
0
Read Time:1 Minute, 3 Second
கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம் எருக்கன்காட்டுப் படுகை கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தலைமையில் வருவாய்த் துறையினா், காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை நேரடியாக சென்று ஆய்வு செய்தனா். அப்போது, உதவி ஆட்சியரைக் கண்டவுடன் பொக்லைன் ஓட்டுநா் தப்பி ஓடிவிட்டாா்.அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த ராஜவா்மன், ஆறுமுகசாமி ஆகிய இருவரை கைது செய்து அண்ணாமலைநகா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா். மேலும், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள் கைப்பற்றப்பட்டு அண்ணாமலைநகா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
நிருபர்: அருள்மணி, கடலூர்.