0 0
Read Time:3 Minute, 48 Second

சீர்காழியில் தனியார் சிடி ஸ்கேன் நிலையங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் தற்போது பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஸ்கேன் எடுக்க முடியாமல் ஏழை, நடுத்தர மக்கள் அவதியடைகின்றனர். அதனால் அரசு தலையீட்டு கட்டணம் நிர்ணயம் செய்திட வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்றும் 2-ம் அலை தமிழகத்தில் வேகமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பொதுமுடக்கத்தினை அறிவித்து பொதுஇடங்களில் கூட்டம் கூடுவதை தடுத்துவருகிறது. கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதனை அறியாமலேயே தாமதமாக மருத்துவசிகிச்சைக்கு செல்வதால் பலர் இறந்து வருகின்றனர். கரோனா தொற்றை கண்டறிய ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்படுகிறது. இதில் தொண்டை மற்றும் மூக்கு வழியாக சளி மாதிரிகளை சேகரித்து கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என பரிசோதனை செய்து முடிவுகள் தெரிவிக்கப்படுகிறது. கரோனா தொற்று ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு மேல் கடந்துவிட்டால் கரோனா வைரஸ் மூச்சுகுழல் வழியாக நுரையீரலை சென்றடைந்துவிடும்.

அப்போது இந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கரோனா தொற்றை கண்டறியமுடியாது. அப்போது சிடி ஸ்கேன் எனும் கதிரியக்க நிழற்படம் மூலம் தான் நுரையீரல் தொற்று பாதிப்பை துல்லியமாக கண்டறியமுடியும். அதனால் கரோனா தொற்று பரிசோதனையில் சிடி ஸ்கேன் பரிசோதனை இன்றியமையாததாக உள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் எடுக்க ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

ஆனால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் பொதுமக்கள் தனியார் சிடி ஸ்கேன் சென்டர் செல்கின்றனர். அவ்வாறு தனியார் நிலையத்தில் ரூ.4500 வரை பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சிடி ஸ்கேன் பரிசோதனை எடுக்க தயங்கி எடுக்காமலே நோய் முற்றி சிரமப்படுகின்றனர். சீர்காழி பகுதியில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது.

இறப்பு விகிதமும் சீர்காழியில் நாள்தோறும் ஏற்பட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாக கண்டறியும் சிடிஸ்கேன் சீர்காழி அரசு மருத்துவமனையில் விரைந்து ஏற்படுத்திடவும், தனியாரில் சிடி ஸ்கேன் எடுக்க அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து அரசே கட்டணத்தை கரோனா தொற்று பரவல் காலம் முடியும் வரை நிர்ணயம் செய்திடவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %