0 0
Read Time:1 Minute, 29 Second

மணல்மேடு அருகே திருவாளபுத்தூர் மெயின் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட கசிவு சரி செய்யப்பட்டது. அப்போது சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாமல் விட்டு விட்டனர்.

இந்த சாலை கும்பகோணம், தஞ்சாவூர், காட்டுமன்னார்குடி, கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், நாகப்பட்டினம், வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக் கூடிய முக்கிய பிரதான சாலையாகும்.இந்த சாலையில் தினசரி கனரக வாகனங்கள், அரசு பஸ்கள், பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன. சாலையில் பெரிய பள்ளம் இருப்பதால் வாகனத்தை சற்று சாலையில் ஏறி செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து திருவாளப்புத்தூர் சாலையை சீரமைப்பார்களா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நிருபர்:

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %