0 0
Read Time:1 Minute, 9 Second

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி. ராஜநாராயணன் வயது முதிர்வின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 99.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைச் செவல் என்ற கிராமத்தில் பிறந்த அவர், தற்போது புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்தார். கி.ரா என அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல்காட்டு விவசாயி, கதைசொல்லி, வட்டார சொல்லகராதியை உருவாக்கியவர், பொதுவுடைமைவாதி என பன்முகத் தன்மையை தன்னகத்தே கொண்டவர்.

சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக்கதைகள் என பல்வேறு நூல்களையும் புதினங்களையும் படைத்த இவரின் கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக 1991ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %