தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. 13-ந்தேதி நடந்த அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த 15 -ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக உள்மாவட்டங்களுக்குள்ளும், வெளிமாவட்டங்களுக்கும் பயணம் செயய 17-ந்தேதி முதல் ‘இ-பதிவு’ முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் ‘இ-பதிவு’ முறை அமலுக்கு வந்தது. இதனால் நாகை மாவட்டம் திருக்குவளை போலீசார் போலீஸ் நிலையம் அருகே சாைலயில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்து ‘இ-பதிவு’ அனுமதி உள்ளதா? என சோதனை செய்தனர்.சோதனை சாவடியில் கண்காணிப்புஇதேபோல் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனைச்சாவடியில் நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி வந்த வாகனங்கள் இ-பதிவு அனுமதி பெறப்பட்டுள்ளதா? ஆய்வு செய்தனர். திருமருகல் அருகே வாழ்மங்கலம் சோதனை சாவடி, ேசஷ மூலை சோதனை சாவடி, கங்களாச்சேரி சோதனை சாவடி ஆகிய இடங்களில் சாலையில் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளிமாவட்டங்களில் வந்த வாகனங்களை ‘இ-பதிவு’ அனுமதி உள்ளதா? என சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.மாவட்ட எல்லையான தாணிக்கோட்டகம், வேட்டைக்காரனிருப்பு, செங்கத்தலை பாலம் ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.