சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 400 படுக்கைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆ.அருண்மொழித்தேவன், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கொரோனா தொற்று பாதிக்கபபட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கபபட்டுள்ள நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாளிடம் கேட்டறிந்தனர். மேலும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு உயரிய சிகிச்சை அளித்திடவும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திடவும் அப்போது அவர்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொண்டார்கள். அப்போது அங்கு உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு Horlicks, பழங்கள், பிஸ்கட், பிரட், பேரிச்சம்பழம், குடிநீர் உள்ளிட்ட பொருட்களை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.அருண்மொழிதேவன், கே.ஏ.பாண்டியன் ஆகியோர் வட்டார மருத்துவ அலுவலர் அமுதா பெருமாள் அவர்களிடம் வழங்கினார்கள்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.