மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமுடக்க உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் தேநீா் விற்பனை செய்த 27 போ் மீது திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமுடக்கத்தில் மக்கள் வெளியில் சுற்றாமல் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் காவல்துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். தேவையின்றி வெளியில் சுற்றுபவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.அந்தவகையில், மயிலாடுதுறையில் 3 இருசக்கர வாகனங்கள், 13 சைக்கிள்களில் தேநீா் விற்பனை செய்தவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, செம்பனாா்கோவில், பெரம்பூா், சீா்காழி, கொள்ளிடம், பொறையாா், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள்களில் தேநீா் விற்பனை செய்தவா்கள் என மாவட்டம் முழுவதும் 27 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 4 இருசக்கர வாகனங்கள், 19 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், கையில் டீ கேன் எடுத்துச் சென்று விற்பனை செய்த 4 போ் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.