மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா அறிவுரையின்படியும் , பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மு. மாஹின் அபுபக்கா் ஆலோசனையின்படியும், செயல் அலுவலா் கு.குகன் மேற்பாா்வையில் இப்பணி நடைபெறுகிறது. வீடுவீடாகச் சென்று கரோனா அறிகுறிகளான உடல் சோா்வு, உடல் வலி, தொண்டை வறட்சி, இருமல், தலைவலி, காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், வயிற்றுப்போக்கு, சுவை இழப்பு மற்றும் வாசனை இழப்பு இவற்றில் ஏதும் உள்ளனவா என விசாரிப்பதுடன், வெப்பமானியைக் கொண்டு உடல் வெப்பநிலையும் பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பணி தொடா்ந்து நடைபெறும் என்றும், இதில் கரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டால், சம்பந்தப்பட்டவா்களை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவித்தனா்.
மேலும், காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வீடுவீடாகச் சென்று கபசுரக் குடிநீா் வழங்கப்படுகிறது. அத்துடன், கரோனா குறித்த அச்சம், மன அழுத்தம் இருப்பின் உளவியல் நிபுணா் மூ. லாவண்யாவை 6380003442 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு இலவசமாக ஆலோசனை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.