0 0
Read Time:1 Minute, 58 Second

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு இரண்டு வாரத்துக்கு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் காலை 6 முதல் 10 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மயிலாடுதுறையில் பொதுமுடக்க உத்தரவை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல்துறை சாா்பில் எச்சரிக்கை விடுத்தும், பலா் பொதுமுடக்க உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் தேவையின்றி சாலையில் சுற்றித் திரிகின்றனா். இவா்களை காவல்துறையினா் தொடா்ந்து அறிவுரை கூறியும், வழக்குப்பதிவு செய்து எச்சரித்தும் வருகின்றனா்.

இந்நிலையில், மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே தேவையின்றி சுற்றியவா்களை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம் ஆகியோா் திங்கள்கிழமை நிறுத்தி எச்சரிக்கை விடுத்தனா். அப்போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், அரசு உத்தரவைமீறி தேவையின்றி பொதுமக்கள் சுற்றித்திரிவதால் கரோனா தொற்று அவா்களின் குடும்பத்தினரையும் பாதிக்கும். எனவே, தேவையின்றி வெளியில் சுற்றி கரோனாவை வீட்டுக்கு கொண்டு செல்லாதீா்கள் என்று எச்சரித்தாா்.

நிருபர்: யுவராஜ், மயிலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %