0 0
Read Time:1 Minute, 25 Second

குஜராத்தின் போர்பந்தர் – மஹுவா பகுதியில் டவ்தே’ புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்களும் மின் கம்பங்களும் விழுந்தன.புயலின் சேதங்களை பார்வையிட்ட அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி செய்தியாளர்களிடம் பேசுகையில், புயலால் 16,500 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் இரண்டாயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே புயலின் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

புயல் சேதம் குறித்து குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானியிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி, சேதங்களை நேரில் பார்வையிடுவதற்காக இன்று காலை விமானம் மூலம் குஜராத்தில் உள்ள பவ்நகருக்கு செல்கிறார்.பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பயணித்து புயல் சேதங்களை பார்வையிடவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %