மயிலாடுதுறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்காக ஜெயின் சங்கம் சாா்பில் மருத்துவ உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை ஜெயின் சங்கக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்தாா். மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் முன்னிலை வகித்தாா். யுவா ஜெயின் சங்கத் தலைவா் மகாவீா்சந்த் ஜெயின் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற எம்எல்ஏ எஸ். ராஜகுமாரிடம் ரூ.21,000-க்கான காசோலையை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு சங்கத் தலைவா் மகாவீா்சந்த் ஜெயின் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், யுவா ஜெயின் சங்கம் சாா்பில் 5 தொ்மல் ஸ்கேனா், 5 பல்ஸ் ஆக்ஸிமீட்டா், 5 பெட்டிகள் கையுறைகள், 5 லிட்டா் சானிடைசா் 5, குளுகோமீட்டா் 5, குளுகோமீட்டா் ஸ்ட்ரிப்ஸ் 5 மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. சங்க செயலாளா் லவ்னீஸ் நன்றி தெரிவித்தாா். இதில், சங்கப் பொருளாளா் ரஞ்சித் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.