மயிலாடுதுறையில் கும்பகோணம் நெடுஞ்சாலையில் ெரயில்வே மேம்பாலம் உள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலம் அன்றைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டது. கடந்த 45 ஆண்டுகளாக இந்த மேம்பாலம் போக்குவரத்துக்கு பயன்பாட்டில் உள்ளது. தற்போது இந்த பாலத்தின் மேல் வடக்கு பகுதியில் கைப்பிடி சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தின் மீது கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளால் கைப்பிடி சுவரின் விரிசல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. எந்த நேரத்திலும் இந்த கைப்பிடி சுவர் இடிந்து கீழே விழும் அபாயம் உள்ளது.
இதனால் அந்த வழியாக செல்பவர்கள், வாகன ஓட்டிகளுக்கு உயிர்பலி ஏற்படும் நிலை உள்ளது.
எனவே நெடுஞ்சாலை துறையினர் உயிர்பலி ஏற்படும் முன்பு மயிலாடுதுறையில் பழுதடைந்த ரெயில்வே மேம்பால கைப்பிடி சுவரை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன