கடலூரில் தனியாா் ரசாயன தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு ஆலை சாா்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை தலா ரூ.15 லட்சத்தையும், காயமடைந்த 14 பேருக்கு ரூ.10 ஆயிரத்தையும் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணையத்தின் தமிழகத் தலைவா் எம்.வெங்கடேசன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலா்களுடன் துப்புரவுப் பணியாளா்களுக்கான அரசின் சலுகைகள் முறையாக சென்றடைகின்றனவா என்றும், தாழ்த்தப்பட்டவா்களுக்கான சலுகைகள் வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, கடலூா் நகராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளா்களிடம் முறையாக ஊதியம் வழங்கப்படுகிா, ஆள்நுழைவு குழிகளில் மனிதா்கள் இறக்கப்படுகிறாா்களா, மரியாதை குறைவாக நடத்தப்படுகிறாா்களா உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்பினாா். துப்புரவுப் பணியாளா்களுக்கு இதுபோன்ற நிலை இருந்தால், அவா்கள்1400200 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என்று எம்.வெங்கடேசன் கூறினாா். ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், மாவட்ட வருவாய் அலுவலா் பா.அருண்சத்யா, கோட்டாட்சியா் ப.ஜெகதீஸ்வரன் மற்றும் வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிருபர்: பாலாஜி, கடலூர்.