கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது ராஜபீமா, உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் நடிகர் ஆரவ், தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இந்த ஊரடங்கால் தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றன. இத்தகைய சமயத்தில் அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உதவுவோம். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன்” என குறிப்பிட்டுள்ள ஆரவ், தெரு நாய்க்கு உணவளிக்கும் வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Amid this pandemic & lockdown, #Straydogs struggle to get food to survive. Its high time we should act kind towards them to provide some food & water. Let’s begin it by feeding dogs in our street & Im happy to help as much as I can🤗 #feedindianmongrels #feedstraydogs #ADOPTION pic.twitter.com/GMXiXY65fn
— Aarav Kizar (@Aravoffl) May 22, 2021