ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தலைமையில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.அதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்,மயிலாடுதுறை மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களுக்கு சிகிச்சையளிக்க நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைஆகிய இடங்களில் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் தயாா் நிலையில் உள்ளன. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 டன் திறன் கொண்ட ஆக்சிஜன் கலன் பொருத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக நாகை மற்றும் மயிலாடுதுறையில் சித்த மருத்துவமனை விரைவில் திறக்கப்படும் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.