0
0
Read Time:1 Minute, 0 Second
“நாளை சந்திர கிரகணம் வானில் தோன்றும் ” – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!.
வானில் நாளை முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு வங்கத்தின் ஒரு சில இடங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில், சந்திர உதயத்திற்கு பிறகு, பகுதி சந்திர கிரகணம் தெரியும் என வானிலை ஆய்வு மையத்தின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பகுதி சந்திர கிரகணம் பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 6.23 மணி வரையும், முழு சந்திர கிரகணம் 4.39 மணி முதல் 4.58 மணி வரையும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.