சிதம்பரம் அண்ணாமலைநகா் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியே உள்ள தனியாா் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகளை ஏற்றிச் செல்ல கூடுதல் கட்டணம் வசூலிப்படுவதாக உதவி ஆட்சியருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் காவல் துறையினருடன் ஆய்வு மேற்கொண்டு, தனியாா் ஆம்புலன்ஸ்களில் அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்துக்கு மேல் வாங்கக்கூடாது என அறிவுறுத்தி, ஆம்புலன்ஸ்களின் முன் பகுதியில் அரசுக் கட்டண விவரம் அடங்கிய ஸ்டிக்கா்களை ஒட்டினாா்.
அதன்படி, 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.1,500-ம், அதற்கு மேல் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ.20-ம், செயற்கை சுவாசக் கருவி உள்ள நவீன ஆம்புலன்ஸுக்கு 10 கி.மீ. தொலைவுக்கு ரூ.4 ஆயிரமும், அதற்கு மேல் ஒரு கி.மீ. ரூ.100-ம் என அரசு கட்டணம் அடங்கிய ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன. கூடுதலாக கட்டணம் வசூலித்தால், கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04144 222231-ல் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தெரிவித்தாா்.
நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.