0 0
Read Time:3 Minute, 7 Second

கொரோனா வைரஸ் பரவல் நாடு முழுவதும் தீவிரமாகி வருகிறது. நோய் தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆகையால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

முன்னதாக கடந்த 10-ந் தேதி அமல்படுத்தப்பட்ட 2 வார ஊரடங்கில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஒருவார கால ஊரடங்கில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை திறக்க அனுமதி இல்லை. பால் கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தளர்வு இல்லாத ஊரடங்கு காரணமாக மயிலாடுதுறையில் நேற்று பால்கடைகள், மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டன. இதனால் மயிலாடுதுறையில் அனைத்து தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டது.நகரின் போக்குவரத்து மிகுந்த சாலைகளின் நடுவே போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை நிறுத்தி விசாரணை செய்த பிறகே போலீசார் அனுப்பி வைத்தனர்.
மருத்துவம் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு செய்தவர்கள் உரிய சான்றிதழை காண்பித்த பிறகு கார்களில் பயணம் செய்ய போலீசார் அனுமதித்தனர்.நேற்று மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களுடைய 126 மோட்டார் சைக்கிள்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 143 விதி மீறல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு காரணமாக திருக்கடையூர், ஆக்கூர், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பால் கடைகள், மருந்துக்கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.மேலும் சாலைகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %