0 0
Read Time:2 Minute, 10 Second

“கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது” – அன்பில் மகேஷ் அறிவிப்பால் ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு!.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தற்போது தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தான் முழு கவனமும் செலுத்தி வருகிறது.

கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்துவது தொடர்பாக சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக புகார்கள் வந்தது. அதில் விரும்பமுள்ள ஆசிரியர்களை, கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. கோவாக்சின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்திக்கொள்ள ஏதுவாக கூடுதல் தடுப்பூசியை மாநில சுகாதார துறையிடும் கேட்டுள்ளோம். விரைவில் அவை கிடைத்துவிடும்” என்றார். இதனால் எங்கே கொரோனோ தடுப்பு பணிக்கு நம்மை அனுப்பிவிடுவார்களோ என பயந்து பதுங்கிய ஆசிரியர்கள் தற்பொழுது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %