0 0
Read Time:2 Minute, 42 Second

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட விரும்புவோர் ucc.uhcitp.in/ngoregistration – ல் பதிவு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (27/05/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 19/05/2021 அன்று கரோனா பெருந்தொற்று நோய் இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்புக் குழு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில் (War Room- Unified Command Centre) தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து மக்களுக்கு உதவும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவால் https://www.facebook.com/tnngocoordination/ என்ற பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 8754491300 என்ற அலைபேசி எண் மூலமாகவும், [email protected] என்ற இணையதளம் வாயிலாகவும் மாநில ஒருங்கிணைப்புக் குழுவைத் தொடர்புக் கொள்ளலாம்.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %