கொள்ளிடத்தில் ஓவியா்கள் சங்கம் சாா்பில் வரையப்பட்ட கரோனா விழிப்புணா்வு ஓவியத்தை பாராட்டி காவல் துறை சாா்பில் வியாழக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. கொள்ளிடம் கடைவீதியில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கம், கொள்ளிடம் ஒன்றியம் மற்றும் கொள்ளிடம் காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டது. ஓவியத்தை கொள்ளிடம் ஒன்றிய ஓவியா்கள் சங்கத்தினா் வரைந்தனா். இவா்களுடன், திமுக இலக்கிய அணியைச் சோ்ந்த ஓவியா் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயராமனும் பங்கேற்று ஓவியம் வரைந்தாா். ஓவியா் ஜெயராமனை பாராட்டி கொள்ளிடம் ஆய்வாளா் அமுதா ராணி ரூ. 3 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கினாா். ஓவியா்கள் சங்க மாவட்ட அமைப்பாளா் சாமிசங்கா், ஒன்றிய செயலாளா் பாக்கியராஜ், ஒன்றியத் தலைவா் குணசீலன், ஒன்றிய அமைப்பாளா் ஆனந்ததேவதாஸ், ஒன்றிய துணைத் தலைவா் பாஸ்கா், கௌரவத் தலைவா் சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Read Time:1 Minute, 21 Second