நாள் ஒன்றுக்கு ரூ.750/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – 555 காலிப்பணியிடங்கள்!.
தமிழகத்தில் செயல்படும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் மூலமாக மருத்துவ துறை காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி Dispenser & Therapeutic Assistant ஆகிய பணிகளுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மொத்த காலிப்பணியிடங்கள்:
மொத்தமாக 555 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Dispenser – 420 பணியிடங்கள்
Therapeutic Assistant (ஆண்) – 53 பணியிடங்கள்
Therapeutic Assistant (பெண்) – 82 பணியிடங்கள்
வயது வரம்பு :
பதிவாளர்கள் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் கீழ்கண்ட தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
Dispenser – Pharmacy/ Integrated Pharmacy ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Therapeutic Assistant – Nursing Therapy பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.375/- அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் தங்களின் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேலும் அதிகார்வப்பூர்வ தகவலுக்கு கீழுள்ள pdf-ஐ பாருங்கள்.