தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 111 பேரும், அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 74 பேரும், கோவையில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதற்காக தனி வார்டுகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது இறப்புக்கும் கூட நுரையீரல் பாதிப்பே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
நிபுணர்களுடனான கூட்டத்தில் முதல்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சை வழிமுறைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நோய் மூக்கு, கண், மூளையை பாதிக்கக்கூடியது என்பதால் சிகிச்சை முறைகள் குறித்து அந்தந்த துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் முதல்கட்ட வழிகாட்டு நெறிமுறைகள், அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன. விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும்
-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்