சிதம்பரம்: குமராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் சார் ஆட்சியர் ஆலோசனை கூட்டதில் மனு அளித்தனர்!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கொரானா தாக்கம் அதிகம் உள்ள ஊராட்சிகளில் உள்ள தலைவர்களை அழைத்து சார் ஆட்சியர் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குமராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு சார்பில் சார் ஆட்சியாளர்களிடம் கூட்டமைப்புத் தலைவர்கள் கே.ஆர்.ஜி தமிழ்வாணன் பல கோரிக்கையினை மனுவாக அளித்தனர்!.
கீழ்க்கண்ட கோரிக்கையினை மனுவாக அளித்தனர் .
- கொரானா வைரஸ் இயற்கை சீற்றங்கள் எது வந்தாலும் முன்னின்று மக்கள் சேவையில் தலைவர் ஆகிய நாங்கள் பணியாற்றுகிறோம் ஆகையால் எங்களை முன்கள பணியாளராக சேர்க்க வேண்டும்
- கொரானா வைரஸ் தொற்று அதிகம் பரவிக் கொண்டிருக்கின்றது ஊராட்சியில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சியில் பொது நிதியில் போதுமான நிதி இல்லாததால் தலைவர் ஆகிய நாங்கள் மிக சிரமத்துக்கு உள்ளாகிறோம் ஆகையால் ஐயா அவர்கள் பொது நிதியில் நிதி அளிக்க பரிந்துரை செய்ய வேண்டும்.
- கடந்த ஆண்டு புரவி புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அனைவரும் ஒரு வாரகாலம் சமைத்து உணவு அளித்தனர் ஆனால் இன்று வரை செலவுக்கான தொகையை இன்றுவரை கொடுக்கப்படவில்லை மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றி தரும்படி தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த கூட்டமைப்பின் செயலாளர் வரகூர் ஊராட்சி மன்ற தலைவர் பால.அறவாழி பொருளாளர் நந்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் செட்டிக்கட்டளை ஊராட்சி மன்ற தலைவர் செல்வகுமார் வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு அவர்தாம் பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்:பாலாஜி, சிதம்பரம்.