Read Time:56 Second
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்ற மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.பின்னர் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவை குறித்து கேட்டறிந்து முன்களப் பணியாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்களை வழங்கினார்.இதில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ராஜ்குமார், நிவேதா எம்.முருகன், மு.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்ற மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய போது… pic.twitter.com/7HBB2mB6oO
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) May 29, 2021