இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் நீடூரில் கைது செய்யப்பட்ட ISIS ஆதரவாளருக்கு அடைக்கலம் கொடுத்த நபர் குறித்தும் அவர்களது பின்னணி குறித்தும் விசாரணை நடத்த மனு!
நேற்று முன்தினம் நீடூரில் கைது செய்யப்பட்ட ISIS ஆதரவாளருக்கு அடைக்கலம் கொடுத்த நபர் குறித்தும் அவர்களது பின்னணி குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சீர்காழி தலைமை தபால் அலுவலகத்திலிருந்து விரைவு அஞ்சலில் புகார் மனு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . அந்த மனுவில்,
கோவை மரக்கடை பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிக். சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS ( Islamic State of Iraq and Syria ) அமைப்புடன் தொடர்புடையவர்.
என இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் மனுவை அனுப்பியுள்ளார்.
இந்து தலைவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டிய வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது கூட்டாளிகள் 7 பேருடன் கைது செய்யப்பட்டவர்.
இவர்கள் மீது IPC 143,120 B மற்றும் தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு வழக்குபதிவு செய்யப்பட்டது.
சென்னை – பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால், தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளில் ஆஜராகாததால் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடிவாரண்ட் பிறப்பித்தது சிறப்பு நீதிமன்றம்.
இந்நிலையில் மயிலாடுதுறை அருகில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நீடூரில் பதுங்கியிருந்த முகமது ஆசிக்-ஐ நேற்று முன்தினம் 27.05.2021 வியாழக்கிழமை இரவு தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிகாரிகள் மயிலாடுதுறை மாவட்ட அதிரடிப்படை போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதோடு தேச விரோத
செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஒருவர் மயிலாடுதுறை நீடூரில் ஒரு கோழிக்கடையில் பதுங்கி இருந்தது அதிர்ச்சியளிக்கிறது.
முகமது ஆசிக்கிற்கும் அவருக்கு வேலை கொடுத்து அடைக்கலம் கொடுத்தவருக்கும் உள்ள தொடர்பு குறித்தும் அவர்களது பின்னணி குறித்தும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.