கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலுள்ள திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில் முன் கட்டுமஸ்தான ஆணழகன் போல புஜபலம் காட்டி நின்ற அரசமரம் இன்று மண்ணில் சாய்ந்தது.
இந்த மரம் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் பள்ளி நாட்களில் அரச மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட நினைவு இன்னும் பலருக்கு பசுமையாக இருக்கிறது. விடிகாலை,மாலை நேரங்களில் குருவிகளின் கூச்சலும் கும்மாளமுமாக இருக்கும் மரத்திற்கு அரசின் வயது ஏறக்குறைய 100 இருக்கும். பல வருடங்களாக மரத்தை சுற்றி ஞாயிறு சந்தையும் நடந்து வந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் இங்கு மாலை நேரங்களில் கூடிநிற்பது வாடிக்கை. திருவேட்கள பெருமான் வாயிலில் ஒரு நாகலிங்க மரமும் அதனருகே சதுர மேடை கட்டி கம்பீரமாக நின்ற என் முப்பாட்டன் இன்று வீழ்ந்துதது என பலரும் வேதனை கொள்கின்றனர். அடிமரம் நிலையாக உள்ளதால் மீண்டும் உயிர்த்தெழும் என நம்பிக்கையோடு பலரும் பதிவிட்டும் நம்பிக்கை தெரிவித்தவண்ணமும் உள்ளனர்.
செய்தி: தயாநிதி,சிதம்பரம்.