தமிழக ரேஷன் கடைகளில் 13 மளிகை பொருட்களை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ 4000 வழங்குவதாக திமுக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது.
அதன்படி 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7 ஆம் தேதி கையெழுத்திட்டிருந்தார். அதில் இந்த திட்டமும் ஒன்று. முதல் தவணையாக ரூ 2000 வழங்கப்பட்டுவிட்டது.
இரண்டாவது தவணை ரூ 2000 வழங்குவது குறித்து நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினுடன் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த நிலையில் கேஸ்கள் குறைந்ததால் மேலும் ஒரு வாரத்திற்கு வரும் 7-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அரசு அறிவித்தது.
பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் நடமாடும் வண்டிகளில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வது போல் மளிகை பொருட்களும் விற்பனை செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கின. மேலும் யாரும் பசியின்றி இருக்கக் கூடாது என்பதற்காக 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அவை என்னென்ன பொருட்கள் என்பதை பார்ப்போம். கோதுமை மாவு- 1 கிலோ உப்பு- 1 கிலோ ரவை- 1 கிலோ சர்க்கரை- 500 கிராம் உளுத்தம் பருப்பு- 500 கிராம் புளி- 250 கிராம் கடலை பருப்பு- 250 கிராம் கடுகு- 100 கிராம் சீரகம்- 100 கிராம் மஞ்சள் தூள்- 100 கிராம் மிளகாய் தூள்- 100 கிராம் குளியல் சோப்பு (125 கிராம்)- 1 துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1
