மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்தமின் அழுத்தம் ஏற்படாமல் தவிா்க்க மாவட்டத்தில் 4 இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தலைமை வகித்து பேசியது: கோடைக் காலத்தில் மின்நிறுத்தம் செய்யாமல் இருக்கவும், குறுவை விவசாயம் பெரும்பாலும் நிலத்தடிநீரை கொண்டு செய்துவருவதால் குறைந்தமின் அழுத்தம் இல்லாமல் தேவையான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின்நிறுத்தம் இல்லாமல் இருக்க திருக்கடையூா், சங்கரன்பந்தல், வடமட்டம் ஆகிய இடங்களில் துணைமின் நிலையங்கள் அமைப்பதற்கும், வழுவூரில் துணை மின்நிலையத்துடன் கூடிய துணை அலுவலகம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், மயிலாடுதுறை ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சிமூா்த்தி, மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளா் வை. முத்துக்குமரசாமி, சீா்காழி மின்வாரிய செயற்பொறியாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிருபர்: முரளிதரன், சீர்காழி.