0 0
Read Time:3 Minute, 11 Second

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய வேண்டுமெனவும், கொரோனா வார்டுக்குள் பார்வையாளர்கள் சென்று நோயாளிகளை பார்ப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால் கடலூர் அரசு மருத்துவமனையில் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

அதாவது கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்குள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றனர். அவர்கள் முறையாக கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. 
மேலும் வார்டுக்குள் கொரோனா நோயாளிகளுடன் தங்கியிருப்பவர்கள் பகல் நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரிவதுடன், மருத்துவமனை எதிரே சாலையை கடந்து அருகிலுள்ள கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். 
இதனால் அவர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு வந்துசெல்லும் பொதுமக்களுக்கும் தொற்று பரவும் நிலை உள்ளது.

மேலும் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை ஸ்ட்ரெச்சரில் வைத்து, மருத்துவமனை அருகில் உள்ள சவக்கிடங்குக்கு சாலையை கடந்து தள்ளிச் செல்கின்றனர். 
இவ்வாறு தள்ளி செல்லும்போது கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பார்த்து மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். 
இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அருகிலுள்ள சவக்கிடங்குக்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மேலும் கொரோனா வார்டுக்குள் செல்லும் பார்வையாளர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க மருத்துவமனை ஊழியர்கள் அறிவுறுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %