0 0
Read Time:3 Minute, 46 Second

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் டாக்டர் முருகேசன் இன்று மூன்றாம் தேதி பணி ஓய்வு பெறுகிறார் இந்த நிலையில் அண்ணாமலை பல்கலை கழக ஊழியர் சங்க தலைவர் மனோகரன் பொதுச் செயலாளர் பழனிவேல் உள்பட ஊழியர் சங்க நிர்வாகிகள் பேட்டியின் போது நிருபர்களிடம் கூறுகையில்:

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தராக மூன்றாண்டுகள் பணியாற்றி இன்று ஓய்வு பெறும் துணைவேந்தர் டாக்டர் முருகேசன் பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத அலுவலர் ஊழியர்களுக்கு எந்த நன்மையும் எந்த பதவி உயர்வும் அளிக்கவில்லை அதுபோல் கடந்த ஆறு வருடங்களில் பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் ஊழியர்களுக்கு 50% தான் பணி பயன் தொகை கொடுக்கப்பட்டுள்ளது மீதி தொகை இதுவரை கொடுக்கப்படவில்லை கடந்த ஆறு வருடங்களில் 200க்கும் ஓய்வுபெற்ற அலுவலர் ஊழியர்கள் இறந்துவிட்டனர் துணைவேந்தர் முருகேசன் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எந்த வளர்ச்சி திட்டத்தையும் பல்கலைக்கழகத்தில் செய்யாமல் தனது பணிக்காலத்தை வீணடித்து விட்டார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது ஆனால் தற்பொழுது 50 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை தான் உள்ளது அதுபோல் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிட பராமரிப்பு மோசமான நிலையில் உள்ள மருத்துவமனையில் போதுமான ஊழியர்களும் நியமிக்கப்படவில்லை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் செய்யும்பொழுது பல்கலைக்கழகத்தில் உள்ள தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் துணைவேந்தராக நியமிக்க தமிழக முதல்வர் உயர்கல்வித்துறை அமைச்சர் உயர்கல்வித்துறை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இது சம்பந்தமாக தமிழக முதல்வர் உள்பட அமைச்சர்களை ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம் துணைவேந்தர் முருகேசனின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்து ஊழியர் சங்கம் சார்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் எழுத்து மூலமாக நாங்கள் ஊழியர் சங்கத்தின் வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்து உள்ளோம் இவ்வாறு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் பேட்டியின் போது நிருபர்களிடம் கூறினார்கள்

துணைவேந்தர் முருகேசன் இன்று 3ஆம் தேதி பணி ஓய்வு பெறும் நிலையில் ஊழியர் சங்க நிர்வாகிகள் துணைவேந்தர் மீது குற்றம்சாட்டி பேட்டி அளித்த சம்பவம் அண்ணாமலை பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %