0 0
Read Time:1 Minute, 41 Second

தமிழகத்தில் நீடித்துவரும் முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழ்நாட்டில் ஊரடங்கைத் தளர்த்துவதா நீடிப்பதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு 7ம் தேதி அதிகாலை வரை அமலில் உள்ள நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் இருக்குமா என்பது குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை மேற்கொள்கிறது.
காலை 11.30 மணிக்கு தலைமை செயலகத்தில் ஊரடங்கு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது என முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தொற்று குறைந்த பகுதிகளுக்கு மாவட்ட அளவிலான தளர்வுகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைச்செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தலைமைச்செயலாளர், பொதுத்துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர், காவல்துறை டிஜிபி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %