0 0
Read Time:2 Minute, 47 Second

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரசால் தினசரி 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 10-க்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர். கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3800 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 580 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடியவை.

இந்நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5,190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் ஏராளமானவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதிய படுக்கை வசதி இல்லாததால், தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வருவதால் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தற்காலிகமாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 350 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 168 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையது. இந்த அனைத்து படுக்கைகளிலும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதன் காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக படுக்கை வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக கூடாரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. இவை இன்னும் ஓரிரு நாளில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றார்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %