0 0
Read Time:4 Minute, 30 Second

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? இன்று அறிவிப்பு வெளியாகிறது!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.30 மணியளவில் மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், போலீஸ் டிஜிபி திரிபாதி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதையும், தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஒவ்வொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முதல்வரிடம் முன்வைத்தனர். அப்போது, தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நீட்டிக்கலாமா அல்லது தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது பேசிய அதிகாரிகள், ‘‘தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் இன்னும் தினசரி பாதிப்பு 22 ஆயிரம் என்ற நிலை உள்ளது. இதனால் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும். அதேநேரம், பொதுமக்கள் தற்போது கடைகளுக்கு சென்று நேரடியாக பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.

அதனால் நோய் தொற்று குறைந்த பகுதிகளில் காலையில் குறிப்பிட்ட நேரம் மட்டும் காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்க அனுமதி அளிக்கலாம். குறிப்பாக, கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களான தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருப்பத்தூர், திருநெல்வேலி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவிக்கலாம். நோய் தொற்று ஆயிரத்துக்கும் அதிகம் உள்ள கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தளர்வுகள் எதுவும் இல்லாத ஊரடங்கை அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தற்போதுள்ள முழு ஊரடங்கை நீடிப்பது என்றும், அதேநேரம் கடைகளை குறைந்த நேரம் திறக்க அனுமதிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களை கேட்டுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கலாமா, அப்படியே நீட்டித்தாலும் சிறிய அளவு தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வந்தாலும் இன்னும் தினசரி பாதிப்பு 22 ஆயிரம் என்ற நிலை உள்ளது. இதனால் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்க வேண்டும். நோய் தொற்று குறைந்த பகுதிகளில் காலையில் குறிப்பிட்ட நேரம் மட்டும் காய்கறி மற்றும் மளிகை கடைகளை திறக்க அனுமதி அளிக்கலாம் என அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %