0 0
Read Time:2 Minute, 23 Second

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படு்த்தப்பட்டுள்ளது. இதில் காரணமின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கடலூர் அடுத்த பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையில் போலீசார் நேற்று  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது புதுச்சேரியை நோக்கி 5 மோட்டார் சைக்கள்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வீதம் மொத்தம் 15 வாலிபர்கள் பேர் வந்தனர்.
இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, எங்கு சென்று வருகிறீர்கள்? என கேட்டபோது கடலூரில் நடந்த திருமணத்திற்கு சென்று விட்டு புதுச்சேரிக்கு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். 


கொரோனா தொற்று பரவல் உள்ள இந்த நேரத்தில் இதுபோன்று சுற்றி வரலாமா என்று அவர்களை  இன்ஸ்பெக்டர் சரஸ்வதி எச்சரிக்கை செய்தார். மேலும் அவர்களிடம் திருக்குறள் கூறுமாறு தெரிவித்தார். திருக்குறளை அவர்கள் தவறாக ஒப்பித்தனர். 
பின்னர் அவர்களை  அந்த பகுதியில் ஓட விடுவது, உடற்பயிற்சி செய்ய செய்வது என்று சிறிது நேரத்துக்கு நூதன தண்டனையை வழங்கினார்.  இதை தொடர்ந்து போலீசார் அந்த நபர்களுக்கு அபராதம் விதித்தனர்.மேற்கொண்டு இதுபோன்று  ஊரடங்கு காலத்தில் வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %