0 0
Read Time:1 Minute, 21 Second

தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சுயத்தொழில் செய்வோர் இ-பதிவு மேற்கொள்ள இணையத்தில் தனியாக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர், ஹவுஸ் கீப்பிங் ஆகிய சுய தொழில் செய்பவர்கள் இ-பதிவு அனுமதியுடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இ-பதிவு மேற்கொள்ள eregister.tnega.org என்ற தமிழக அரசின் இணையதளத்தில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுயதொழில் என்ற பிரிவை தேர்வு செய்து, எந்த வகை வேலை என்பதை குறிப்பிட வேண்டும்.

பின்னர், விண்ணப்பதாரரின் அடையாள அட்டை, முகவரி, பயணிக்கும் வாகனத்தின் விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்து இ-பதிவு ரசீதை பெற்றுக் கொள்ளலாம். இதனிடையே, சுய தொழில் செய்வோர் உட்பட ஏராளமானோர் விண்ணப்பிப்பதால் இ-பதிவு செய்யும் இணையதளம் முடங்கியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %