மயிலாடுதுறையில் உள்ள பல்லவராயன்பட்டை நரிக்குறவர்கள் மக்களுக்கு நிவாரண உதவி ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் வைத்தீஸ்வரன்கோவில் சென்ட்ரல் அரிமா சங்கம் சார்பில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு லயன்ஸ் மாவட்ட தலைவர் செந்தில் வைரவன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீர பாண்டியன், அரிமா சங்க மாவட்ட தலைவர் இன்ஜினியர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பங்கேற்று நிவாரணப் பொருட்களை அனைத்து நரிக்குறவர் குடும்பங்களுக்கும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், ஜனபுனிதம் ஆன்மீக நிறுவனர் ஜன புனிதர், வைத்தீஸ்வரன் கோவில் தலைவர் நட் பாலன், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் வெங்கட்ராமன், திமுக பிரமுகர் மணி,காங்கிரஸ் ராமகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றார்கள். நிவாரண ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளைய் சார்ந்த மெய்கண்டன் செய்திருந்தார். தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள காவேரிகரை பகுதியில் திருநங்கைகள் 15 பேருக்கு உள்கேணி ஓம் சக்தி வார வழிபாட்டு மன்றத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கமலநாதன், ஓம் சக்தி வார வழிபாட்டு மன்ற தலைவர் கவிஞர் கங்கை ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றார்கள்.
நிருபர்: வெங்கட் ஜெக சூர்யா , மயிலாடுதுறை