0
0
Read Time:1 Minute, 11 Second
மயிலாடுதுறை அருகே மூவலூா் காவிரி ஆற்றின் நீா் ஒழுங்கியில் இருந்து பிரியும் சுமாா் 4 கி.மீ. நீளமுள்ள முத்தப்பன் வாய்க்கால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுப்பணித் துறை மூலம் ரூ.2.75 லட்சம் மதிப்பீட்டில் தற்போது தூா்வாரப்படுகின்றன. இப்பணியை மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எஸ். துரைராஜ், இயற்கை விவசாயி மாப்படுகை ஏ.ராமலிங்கம், சிஐடியூ மாவட்டச் செயலாளா் ஆா். ரவீந்திரன், ஒன்றியச் செயலாளா் சி.மேகநாதன் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா். இப்பணியின் மூலம் சுமாா் 10 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, நிலத்தடி நீா்மட்டமும் உயரும் என்பதால் தமிழக அரசுக்கும், பொதுப்பணித்துறைக்கும் அவா்கள் நன்றி தெரிவித்தனா்.