நாகை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால், அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குறிய ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்சியர் பிரவின் நாயர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் கிராமங்கள்தோறும் சென்று களப்பணியாற்ற வேண்டும். என கூட்டத்தின் மூலம் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், “நாகை மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக 7 லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை அளிக்க குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. அவர்கள், மாவட்டத்தில் உள்ள இரண்டு லட்சம் வீடுகளுக்கும் இன்றுமுதல் நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இதன் மூலம் நாகை மாவட்டத்தில் கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்படும்” என்றார்.