0
0
Read Time:1 Minute, 16 Second
சீா்காழி அருகே வடகால் கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்காலில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால் உப்பனாற்றில் கலக்கும் இடத்தில் அதிக ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டதால், உப்பனாற்றிலிருந்து உப்புநீா் வாய்க்காலில் புகுந்துவிட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள சுமாா் 30 ஏக்கா் விவசாய நிலங்கள் உவா் நிலமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீரும் உப்பு நீராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வடகால் கிராமத்தில் வடிகால் வாய்க்காலில் உப்புநீா் புகுவதை தடுக்கும் வகையில், வடிகால் வாய்க்கால் உப்பனாற்றில் கலக்கும் இடத்தில் கதவணை அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.